குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் காலபைரவர் வழிபாடு
ADDED :1078 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவரு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. வெள்ளி கிரீடம், வடை, வண்ண மலர் மாலை அணிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி கோபிநாத் செய்தார். நாகமலைபுதுக்கோட்டை ஆனந்த ஐயப்பன் கோயிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்களை சுந்தர் பட்டர் செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி சோமசுந்தரம் செய்தார்.