மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தானிய வாச பூஜை
ADDED :970 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மார்ச் 27ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயில் ராஜகோபுரமும், உட் பிரகாரத்தில் புதிதாக அமைக்கபட்டுள்ள சன்னதிகளில் பிரதிஷ்டை செய்ய உள்ள விநாயகர், முருகன், பிரம்மா, சூரியன் உள்ளிட்ட விக்கிரகங்களுக்கு ஆகம விதிப்படி முதற்கட்டமாக நேற்று தானிய வாச பூஜை நடந்தது. நெல்லில் விக்கிரகங்களை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.