உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஜேந்திர வரதராஜப் பெருமாளுக்கு வெள்ளி ஆபரணங்கள்

கஜேந்திர வரதராஜப் பெருமாளுக்கு வெள்ளி ஆபரணங்கள்

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் கஜேந்திர வரதராஜப் பெருமாளுக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி ஆபரணங்கள் உபயதாரர் வாயிலாக வழங்கப்பட்டது. சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 100 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் கஜேந்திர வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் அருள்பாலிக்கின்றார். அவருக்கு கிருஷ்ணமாசாரி டிரஸ்ட் வாயிலாக வெள்ளியிலானா கிரீடம், கர்ணபத்திரம், திருமார்பு, திருமுதுகு, பீதாம்பரம், முன்பின் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் கமலம், ஸம்ப அஸ்தம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆபரணங்கள், 22 ஆயிரத்து, 400 கிராமில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு, 10 லட்சம் ரூபாய். இந்த ஆபரணங்கள் கஜேந்திர வரதராஜப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருக்கும் இன்று சாற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !