சப்தகன்னிமார் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :963 days ago
உடுமலை: உடுமலை அருகே மடத்துக்குளம் சாலரபட்டியில், ஸ்ரீ சப்தகன்னிமார், ஸ்ரீ கருப்பண்ணசாமி, கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி யாகசாலை, முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. கடந்த 14ம் தேதி புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. 15ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ேஹாமம், முதற்கால யாக வேள்வி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று காலை, 9:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சப்த கன்னிமார், கருப்பண்ணசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின், கோ பூஜை, தசதரிசனம், அன்னதானம் நடைபெற்றது.