லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் திருத்தேர் விழா
ADDED :962 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் ஐந்தாம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழாவையொட்டி தேர்திருவிழா நடந்தது.
தினசரி விஸ்வரூப தரிசனம், ஹோம காரியங்கள், வேத திவ்ய பிரபந்த பாராயணம், தீர்த்த கோஷ்டி பிரசாதம், திருவீதி புறப்பாடு, உற்சவர் நவ கலச திருமஞ்சனம், திருவாராதனம் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம், கற்பக விருட்ச வாகனத்தில் லட்சுமி நரசிங்க பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, யானை வாகன புறப்பாடு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை, 8:00 மணிக்கு திருமஞ்சனம், 10:00 மணிக்கு தீர்த்தவாரி, மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தது.