காரமடை அரங்கநாதர் கோவில் மார்ச் 6ல் தேரோட்டம்
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம், மார்ச் 6ம் தேதி நடக்க உள்ளது.
காரமடை அரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு மாசி மாத தேர் திருவிழா, வரும் 27ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்குகிறது. 28ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. அன்று இரவு அன்னவாகனத்திலும், மார்ச் 1ம் தேதி சிம்ம வாகனத்திலும், தொடர்ந்து அனுமந்த வாகனத்திலும், அரங்கநாதர் பெருமாள் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். தொடர்ந்து 3ம் தேதி கருட சேவையும், 4ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 5ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்க உள்ளது. அன்று இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்க உள்ளது. 6ம் தேதி காலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது. மார்ச் 7ம் தேதி குதிரை வாகனத்தில் பரிபாட்டையும், 8ம் தேதி சேஷ வாகனத்தில் தெப்போற்சவமும், 9ம் தேதி சற்று முறை சந்தான சேவை உற்சவமும் நடக்கிறது. 10ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.