உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு பிரம்ம ரதம் காணி்க்கை

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு பிரம்ம ரதம் காணி்க்கை

கொல்லூர் : கர்நாடக மாநிலத்தில் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சுனில் ஷெட்டி என்பவர் 1. 50 லட்சம் மதிப்புள்ள பிரம்ம ரதத்தை நன்கொடையாக அளித்துள்ளார். இந்த ரதத்தை கோடேஸ்வர லக்ஷிமி நாராயணன் ஆச்சாரி மற்றும் அவரது மகன் ராஜகோபல ஆச்சாரியார் வடிவமைத்துள்ளனர். இதற்கு முன் மூகாம்பிகை அம்மனுக்கு பயன்படுத்தி வந்த பிரம்ம ரதம் 400 ஆண்டு பழமை வாய்ந்தது. மூகாம்பிகை அம்மனுக்கு 3 ரதங்கள் உள்ளன. தினமும் இரண்டு முறை பயன்படுத்த கூடிய புஷ்ப ரதம், தினமும் இரவில் உதயாஸ்தமன பூஜையின் போது பயன்படுத்தப்படும் தங்க ரதம், மூன்றாவதாக உள்ளது பிரம்ம ரதம் . இது வருடத்திற்கு ஒரு முறை பங்குனி மாதத்தில், கோயிலின் தந்திரி ராமச்சந்திர அடிகள் வேத மந்திரம் முழங்க அம்மனை வைத்து பிரமாண்டமாக வலம் வரும் பிரம்ம ரதமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !