நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா
ADDED :962 days ago
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா தொடங்க உள்ளதை அடுத்து கோவிலில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து முகூர்த்தக்காலுடன் பரம்பரை பூசாரிகள் கோவிலை சுற்றி வந்து முகூர்த்த காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் முன் நட்டனர். இதில் பரம்பரை அறங்காவலர் பூசாரிகள் கணேஷ், சின்ராஜ், கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், யுவராஜ், தினேஷ்குமார், மற்றும் ஏராளமான பக்தர்களும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.