நமச்சிவாய கோஷம் முழங்க இரவு முழுவதும் மகா சிவராத்திரி விழா
ADDED :962 days ago
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் சிவ பக்தர்களின் நமச்சிவாய கோஷம் முழங்க இரவு முழுவதும் சிவராத்திரி விழா நடந்தது.
அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் நான்கு கால பூஜைகளுடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜைகளுடன் முதல் கால பூஜை நடந்தது. 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 1:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 3:00 மணிக்கு நான்காம் கால பூஜை என நான்கு கால பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு காலத்திற்கும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. சிவபக்தர்கள் ஸ்ரீருத்ரம் ஜபம், சிவபுராணம் வாசிக்கப்பட்டது.