மஹா சிவராத்திரி: அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை, லட்சத்தீபம்
ADDED :962 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மஹா சிவராத்திரி விழாவில் நடந்த லட்சார்ச்சனையை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மகா சிவராத்திரி முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள சக்கரகுளத்தில் லட்சத்தீபம் ஏற்றப்பட்டது.
மாசி மாதம், அமாவாசைக்கு முன்பு வரக்கூடிய திரயோதசி மற்றும் சதுர்த்தசி திதிகள் சந்திக்கும் நாளில், பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும், யார் பெரியவர் என்ற அகந்தையை ஒழித்து, ஜோதிப்பிழம்பாகவும், லிங்கோத்பவர் வடிவாகவும், அருணாசலேஸ்வரர் காட்சி கொடுத்த தலம் திருவண்ணாமலை. அவ்வாறு காட்சி கொடுத்த நாள், மஹா சிவராத்திரி விழா நடக்கிறது.