உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குடங்களில் பிடிமானம் இன்றி நிற்கும் கத்திகள்: பக்தர்கள் பரவசம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குடங்களில் பிடிமானம் இன்றி நிற்கும் கத்திகள்: பக்தர்கள் பரவசம்

சிவகாசி: வெம்பக்கோட்டை அங்காள ஈஸ்வரி அம்மன் குருநாதன் கோயிலில் குடத்தின் விளிம்பில் எந்தவித பிடிபானமும் இல்லாமல் நிற்கும் கத்திகளை வணங்கி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வெம்பகோட்டை அங்காள ஈஸ்வரி குருநாதர் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் வைபாற்றில் ஊர்வலம் சென்று கோயிலுக்கு வந்து வழிபட்டனர். இங்கு சுவாமி முன்பு இரு குடங்கள் வைக்கப்பட்டு அதில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் கத்திகளை வைத்து வழிபடுவது ஐதீகம். பிடிமானம் இல்லாமல் கத்திகள் நின்றால் தான் சுவாமி அருள் புரிவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு நடந்த பூஜையில் குடங்களின் விளிம்பில் கத்திகள் எந்த வித பிடிமானமும் இல்லாமல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !