உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம்

செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம்

செஞ்சி: செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது.

செஞ்சி சத்திரத்தெரு அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு 18ம் தேதி மகாசிவராத்திரியன்று காலை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். 12 மணிக்கு ஊரணி பொங்கலும், மாலை 3 மணிக்கு பொன்பத்தி ஏரியில் அண்ணமார் பூஜையும் நடந்தது. மாலை 6 மணிக்கு சக்கராபுரம் குளக்கரையில் இருந்து சக்தி கரகம், அக்னி கரகம் எடுத்து வந்தனர். இரவு அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று அதிகாலை மணிக்கு அம்மன் இருள் முகத்துடன் மயானம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு குறத்தி அவதாரம் எடுத்து குறிசொல்லதலும், 12 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 2 மணிக்கு அங்காளம்மன் விஸ்வரூப அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகல் வழியாக ஊர்வலம் நடந்தது. அப்போது பக்கதர்கள் பல்வேறு வேடமணிந்து ஊர்வலம் வந்தனர். மாலை 5 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரை மயானத்தில் உணவு பொருட்களை கொள்ளை விட்டு மயானக்கொள்ளை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !