உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நத்தம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நத்தத்தில் உள்ள தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன், போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து கோயிலின் முன் அமைந்துள்ள திருகொடி மரத்தில் மஞ்சள் நிறத்தில் மாரியம்மன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் பரம்பரை பூசாரிகள் மேளதாளம் முழங்க ஏற்றினர். இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல், கோவில் பரம்பரை பூசாரிகள் கலந்து கொண்டனர். நாமை கரந்தமலை கன்னிமார் தீர்த்தத் எடுத்து வந்து காப்புக் கட்டி பக்தர்கள் 15 நாள் விரதத்தை தொடங்குகின்றனர். தொடர்ந்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுகு மரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் மார்ச் 7ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !