குண்டம் இறங்கி வழிபட்ட பக்தர்கள்
ADDED :1062 days ago
அன்னூர்: அங்காளம்மன் கோவில் திருவிழாவில், பல நூறு பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். பழமையான, அன்னூர் அங்காளம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலையில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபட்டனர். இதையடுத்து அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.