உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம்

கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம்

கள்ளக்குறிச்சி:கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நேற்று உறியடி உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணஜெயந்தியையொட்டி கோவிலில் காலை 6.30 மணிக்கு பெருமாள், தாயார், சுதர்சனர், கிருஷ்ணர் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.பின்னர் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் முன்பு எழுந்தருள செய்யப்பட்டு, உறியடித்து உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று உறியடித்தனர்.கச்சிராயபாளையம்: வரதராஜபெருமாள் கோவில் மூலவருக்கும், உற்சவ மூர்த்திக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் 3 மணிக்கு உறியடி கொண்டாட்டத்துடன் சாமி வீதியுலா நடந்தது. கூட்டுறவு வங்கி நிறுத்தம், சுப்பிரமணியர் கோவில் தெரு ஆகிய இடங்களில் வழுக்கு மரம் ஏறுதல் போட்டியில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பணம் மற்றும் பலகார முடிப்பை பறித்து எடுத்தனர். குழந்தைகள் சிலர் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !