திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசி கொடியேற்றம்
ADDED :926 days ago
திண்டுக்கல்: கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா துவங்கிய நிலையில் நேற்று கொடியேற்றம் நடந்தது.கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா துவங்கிய நிலையில் பிப் 16ம் தேதி பூத்தமலர் பூ அலங்காரம், 17ம் தேதி பூச்சொரிதல் விழா, 19ம் தேதி சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்ஐ நேற்று மதியம் 12.00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணி அளவில் அம்மனின் மின்தேர் வீதி உலா தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. இரவு கோவில் கலையரங்கில் திண்டுக்கல் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.