கஜரத்னம் குருவாயூர் பத்மநாபன் நினைவூட்டல் தினம் அனுசரிப்பு
பாலக்காடு: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவரின் சேவகனாக இருந்த யானை பத்மநாபன். 2020 பிப்., 26ம் தேதி கோவில் திருவிழாவையொட்டி நடக்கும் சஹஸ்ரகலசம் தூங்குவதின் முந்தைய நாள் உடல்நிலை பாதித்த பத்மநாபன் இறந்தன. தொடர்ந்து தேவஸ்தானம் 2021 டிச. 18ம் தேதி கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீவத்சம் விருந்தினர் மாளிகை அருகே பத்மநாபனின் உருவச் சிலை அமைத்து ஆண்டுதோறும் சஹஸ்ரகலசம் தூங்குவதின் முந்தைய நாள் நினைவூட்டல் தினம் நடத்தி வருகின்றனர். நடப்பாடு நினைவூட்டல் தினம் நேற்று நடந்தன. உருவச் சிலைக்கு தேவஸ்தானம் நிர்வாக குழு தலைவர் விஜயன், உறுப்பினர்களான பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, மனோஜ், கோபிநாதன், ரவிந்திரன், நிர்வாகி வினயன் ஆகியோர் மலர் தூவி நினைவஞ்சலி நடத்தினர். நிகழ்ச்சியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இந்தரசென் என்ற யானை பத்மநாபனின் உருவச் சிலைக்கு முன் நின்று துதிக்கை உயர்த்தி நினைவஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.