நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நாள் கதிர் வைபவம்
ADDED :961 days ago
நான்குநேரி: நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நேற்று நாள் கதிர் வைபவம் நடந்தது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நாள் கதிர் பவம் ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். நாள் கதிர் பவம் என்பது பக்தர்கள் தாங்கள் வயலில் சாகுபடி செய்யும் நெற்பயிரிலிருந்து முதலாவதாக அறுவடை செய்த நெற்கதிர்களை வானமாமலை பெருமாளுக்கு படைக்கும் நிகழ்ச்சியாகும். மடத்தின் 31வது மடாதிபதி மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் ஆசியுடன் நேற்று காலைநாள் கதிர் வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் வானமாமலை பெருமாள் கோயிலுக்கு செலுத்திய நெற்கதிர்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின் தீர்த்த, ஜடாரி, மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நெற்கதிர்களை அங்கிருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.