நவசக்தி வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1294 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நவசக்தி வாராஹி அம்மன் கோவிலில் அமாவாசை திதியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் அருகே நவசக்தி வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை திதியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடந்தன. நவசக்தி வாராஹி அம்மன், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.