கங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1037 days ago
காரப்பாக்கம் :ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் மிகவும் பழமை வாய்ந்த, கங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் காலை நடந்தது. அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரம் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதில், ஓ.எம்.ஆர்., பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை, கோவில் அறங்காவலர் லியோ என். சுந்தரம் நடத்தினார்.