உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 300 ஆண்டுகள் பாரம்பரிய அய்யனார் கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் பாலாலயம்

300 ஆண்டுகள் பாரம்பரிய அய்யனார் கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் பாலாலயம்

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடியில் 300 ஆண்டுகள் பழமையான அய்யனார் கோயிலில், போலீஸ் பாதுகாப்புடன் பாலாலயம் விழா நடந்தது.

பாதரக்குடி கிராமத்தில் தேனாற்றின் கரையில் ஆதீனமிளகி அய்யனார் கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இக்கோயிலவில் அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக குதிரை இடுப்பு திருவிழாவும் நடைபெறாமல் இருந்தது. இதற்காக, புதிதாக கோயிலை கட்ட முடிவு செய்து, நேற்று பாலாலய விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு கிராமத்தில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் பாலாலயம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !