உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பநாயக்கன்பட்டி பெருமாள் கோவிலில் கல்யாண உற்சவம்

அப்பநாயக்கன்பட்டி பெருமாள் கோவிலில் கல்யாண உற்சவம்

சூலூர்: அப்பநாயக்கன்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.

சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் பழமையானது. இங்கு, நேற்று முன்தினம் மாலை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. புனித நீர் கலசங்கள் வைத்து, ஹோமம் நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பழங்கள், இனிப்பு, கார வகைகள், வெற்றிலை, பாக்கு, பூக்கள் உள்ளிட்ட சீர் வரிசைகளை பக்தர்கள் கொண்டு வந்தனர். பஜனை பாடல்கள் பாடப்பட்டன. உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !