வடமதுரை மதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1118 days ago
வடமதுரை: வடமதுரை முல்லாம்பட்டியில் ஸ்ரீ பெருமாள், மதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை துவங்கிய விழாவில் இரண்டு கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜன் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். பேரூராட்சி கவுன்சிலர் வினோதினி தினேஷ், அ.தி.மு.க., நகர ஜெ., பேரவை இணை செயலாளர் சக்திவேல், தும்மலக்குண்டு வார்டு முன்னாள் கவுன்சிலர் சரவணன் பங்கேற்றனர்.