சென்றாயப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :1034 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தில் உள்ள சென்றாயப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்றாம்பாளையம் கிராமத்தில், சென்றாயப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த, 24ம் தேதி மங்கல இசை, அங்குரார்பணம், பலிகா பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, இரண்டு கால பூஜை நடந்தது. நேற்று, கோ பூஜையுடன் துவங்கி, கும்பாபிஷேகம் நடந்தது. கலசங்களுக்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திருகல்யாண வைபவம் நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு தாமோதரன் கலந்து கொண்டார். பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.