பாலக்காடு பெருமாள் கோவிலில் மஹாபாரத சிவராத்ரி மஹோத்ஸவம் கோலாகலம்
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி அருகே உள்ளது அய்யபுரம் ஸ்ரீ பெருமாள் சுவாமி கோவில். இங்கு என்ன ஆண்டும் மாசி மாதம் மகாபாரத சிவராத்திரி மகோத்ஸவம் நடப்பது வழக்கம். பத்து நாள் கொண்ட நடப்பாண்டு உற்சவத்தின் கொடியேற்றம் சிவராத்திரி நாளான 18ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தனர்.
தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் உற்சவம் மூர்த்திகளுக்கு நடைபெற்றன. உற்சவத்தின் சிறப்பு நாளான இன்று காலை 4.30 மணிக்கு நிர்ம்மாலியதர்சனம், வாகச்சார்த்து, கணபதி ஹோமம், 7மணிக்கு கல்பாத்தி ஆற்றிலிருந்து செண்டை மேளம் முழங்க உற்சவருக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தம் கொண்டுவரும் வைபவம் நடந்தது. தொடர்ந்து 9க்கு அக்னிகுண்டம் திறப்பு, பறை எடுப்பு, புருஷசூக்த ஜபம், மூலவருக்கு அபிஷேகம், அலங்கரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 5 மணிக்கு தாம்பூல வினியோகம், நிறைமாலை, சுற்று விளக்கு, அர்ச்சனை ஆகியவை நடந்தன. 7 மணிக்கு உற்சவ மூர்த்திகளை ஆடை ஆபரண அலங்காரத்துடன் முகமண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. 8.30க்கு அக்னி குண்டத்தில் பூ வளர்ப்பு, 11க்கு தாலம் எடுப்பு ஆகியவை நடைபெற்றது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு பக்தர்கள் பூ மிதித்து வழிபடும் வைபவம் நடந்தது. உத்ஸவத்தை காணவும் மூலவரை தரிசித்து வழிபடவும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். மார்ச் 1ம் தேதி உற்சவமூர்த்திக்கு நடக்கும் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகின்றன.