உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகர வாகனத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் அருள்பாலிப்பு

மகர வாகனத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் அருள்பாலிப்பு

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, இரண்டாம் நாள் காலை, அம்மன் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரமோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் காலை, அம்மன் வெள்ளி விருஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது. இரவு தங்க மான் வாகனத்தில் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாள் நேற்று காலை, காமாட்சி அம்மன், மகர வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இரவு சந்திர பிரபை வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடந்தது. இவ்விழாவில் இன்று காலை, அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று இரவு, யானை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், வரும் 6ம் தேதி வரை நடக்கிறது. அன்று இரவு, அம்மன் வீதியுலா முடிந்ததும் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !