வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருப்புகழ் பஜனை
ADDED :1029 days ago
திருக்கோவிலூர்: திருவாசக முற்றோதல் குழுவின் சார்பில் கிருத்திகை முன்னிட்டு வீரட்டானேஸ்வரர் கோவில் அம்பாள் சன்னதியில் திருப்புகழ் பஜனை நடந்தது.
திருக்கோவிலூர் திருவாசகம் முற்றோதல் குழு, பரனூர் அம்பலவாணன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள சிவனடியார்கள் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்று வரும் நிலையில், கிருத்திகையை முன்னிட்டு, நேற்று திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் அம்பாள் சன்னதியில் திருப்புகழ் பஜனை நடந்தது. இதில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு திருப்புகழ் பஜனை செய்தனர்.