உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் ஸ்ரீ துர்க்கா ஹோம விழா

காரைக்காலில் ஸ்ரீ துர்க்கா ஹோம விழா

காரைக்கால்: காரைக்காலில் ஸ்ரீ ருஷ்யசிருங்கேஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி ஸ்ரீதுர்க்கை அம்மனுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா பால்குடம் எடுத்து வழிப்பட்டார்.

காரைக்கால் கோட்டுச்சேரி ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீருஷ்யசிருங்கேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீதுர்க்கை அம்மனுக்கு 28ம் ஆண்டு ஸ்ரீதுர்க்கா ஹோம விழா மற்றும் உலக நன்மை வேண்டி நேற்று  முன்தினம் ஸ்ரீவெள்ளை விநாயகர் ஆலயத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் பெண்கள் தங்கள் குடும்ப நன்மை மற்றும் உலக நன்மை.இயற்கை சீற்றத்திலிருந்து  அனைவரையும் காக்க வேண்டி பெண்கள் பால்குடம் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தடைந்தது. பின்னர் அமைச்சர் சந்திரபிரியங்கா கோபூஜை.கணபதி ஹோமம் துர்க்கை  அம்மனுக்கு சிறப்பு அபிரேஷகம், ஸப்தகன்னி பூஜை, பிர்ம்மசாரி பூஜை.சுமங்கலி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான  ஏற்படுகளை துர்க்கை அம்மன் மகளிர் வார வழிபாட்டு மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !