உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மாசி திருவிழாவிற்கு தீச்சட்டிகள் வந்துள்ளன

பழநி மாசி திருவிழாவிற்கு தீச்சட்டிகள் வந்துள்ளன

பழநி: பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்குவீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு கம்பத்தில் பூவோடு வைப்பதை தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்  செலுத்துவர்.

பழநி, மாரியம்மன் கோயில், மாசித் திருவிழாவையொட்டி பிப்,.17, மூகூர்த்த கால் நடப்பட்டது. பிப்.21 ல் திருக் கம்பம் தயாரித்து பிப்.,22 அதிகாலை மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்பட்டது.  இதைத்தொடர்ந்து பக்தர்கள் பால் பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். (பிப்.,28) இன்று கொடியேற்றம், கம்பத்தில் பூவோடு வைக்கப்பட உள்ளது. அதன்பின்  பொதுமக்கள் அங்கப்பிரதட்சனம், தீர்த்த குடம் எடுத்தல் மற்றும் தீச்சட்டி எடுத்தல் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர். இதற்கென பக்தர்கள் தீச்சட்டி எடுக்க ஏதுவாக பெரியநாயகி அம்மன் கோயில்  அருகே விற்பனை செய்ய தீச்சட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை ரகத்திற்கு தகுந்த போல் ரூ.60 முதல் கிடைக்கும். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் தீச்சட்டி எடுக்க சிறிய ரக மற்றும் பெரிய  ரக தீச்சட்டி உள்ளன. பழநி சுற்றுவட்டார கிராம மக்கள், மாசி திருவிழாவை கொண்டாட அதிக அளவில் கிழக்கு ரத வீதியில் வர உள்ளதால் இவ்வீதியில் கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டு உள்ளன.  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச். 7ல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. மார்ச்.8ல் தேரோட்டமும் நடைபெறும். மார்ச்.9ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !