உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க சூரிய பிரபை வாகனத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் உலா

தங்க சூரிய பிரபை வாகனத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் உலா

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று தங்க சூரிய பிரபை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பிரம்மோற்சவத்தில், நேற்று தங்க சூரிய பிரபை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்ச் 8ம்  தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !