ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : நெல் அளவை கண்டருளிய நம்பெருமாள்
ADDED :1049 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் (தெப்பத்) திருவிழாவின் 7ம் திருநாளான நேற்று மாலை உற்சவர் நம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி, உத்திர வீதிகளில் திருவீதி உலாவந்து இரவு 9மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று 8ம் நாளில் முக்கிய வைபமான தெப்பத் திருவிழாநடைபெறகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையார் திரு.செ.மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.