உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து கோயில் திருக்குளம் சீரமைப்பிற்கு அனுமதி

குன்றத்து கோயில் திருக்குளம் சீரமைப்பிற்கு அனுமதி

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கிழக்குப் பகுதியில் (லட்சுமி தீர்த்த குளம்) திருக்குளத்தின் உள்பகுதி கருங்கற்கள் விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. திருக்குளத்தை ரூ. 6.50 கோடியில் சீரமைக்க கோயில் தரப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அனுமதி கிடைக்காததால் பணிகள் துவக்க முடியாமல் இருந்தது. இது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. செய்தியின் எதிரொலியாக திருக்குளம் சீரமைப்பிற்கு அனுமதி கிடைத்துள்ளது. டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் துவக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !