உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை ஏங்கும் பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை ஏங்கும் பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் வருவோர், அடிப்படை வசதிக்காக ஏங்கும் நிலை உள்ளது.
தென் திருப்பதியாக பக்தர்கள் கருதப்படும், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்கு, சனிக்கிழமைதோறும், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் , பக்தர்கள் வந்து செல்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்ட பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் குளிப்பதற்கான கோயில் அடிவார கோனேரி தீர்த்தகுளத்தில் தண்ணீர் இல்லை. முடி காணிக்கை செலுத்தி, குளிப்பதற்கு தண்ணீரின்றி பாதிக்கும் நிலை உள்ளது. குளத்தின் அருகே, ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வசதி செய்து வேண்டும். முடி காணிக்கை இடத்தில், கூடுதல் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். கழிப்பறை வசதி இல்லாததால், கிரிவல பாதையை கழிப்பறையாக மாற்றும் அவலம் தொடர்கிறது. கோயில் நுழைவு பாதையில், முடி காணிக்கை செலுத்தும் இடம், இரு சக்கர வாகனங்கள் பார்க்கிங் இடம் இருப்பதால், முடி காணிக்கை செலுத்த வருவோர் சிரமம் படுகின்றனர். இதை தவிர்க்க, இரு சக்கர வாகனங்களை, வேறு இடத்தில் பார்க்கிங் செய்ய ,நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் ரோடு மோசமாக இருந்ததால், நகராட்சி பள்ளி பாலம் முதல் ஆன்டனி பள்ளி வரை செப்பனிட்டனர். மீதமுள்ள 1 கிலோ மீட்டர் தூரம், ரோடு போடாமல் விட்டு விட்டனர். திருவண்ணாமலை கோயில் ரோடு, குண்டும் குழியுடன் காட்சியளிக்கிறது. பக்தர்கள் சிரமபடுவதால், இந்த ரோட்டை செப்பனிட, நெடுஞ்சாலை துறை முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !