உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போலி பன்னீர் அபிஷேகத்திற்கு தடை தினமலர் செய்தி எதிரொலி

போலி பன்னீர் அபிஷேகத்திற்கு தடை தினமலர் செய்தி எதிரொலி

திருவாடானை:"தினமலர் செய்தி எதிரொலியாக பிராந்திபாட்டிலில் உள்ள போலி பன்னீரை சுவாமிக்கு அபிஷேகம் செய்யக்கூடாது என, சிவாச்சாரியார்களுக்கு தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஆடி, சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு, பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதசுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடக்கும். பன்னீர்அபிஷேகம் சிறப்பு என்பதால் பக்தர்கள் இங்குள்ள கடைகளில் விற்கபடும் பன்னீரை வாங்குகின்றனர். ஆனால் சில கடைகாரர்கள் தண்ணீரில் சிறிது பன்னீரை கலந்து அதை பிராந்திபாட்டிலில் அடைத்து விற்பனை செய்கின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியாக, போலி பன்னீரை சுவாமிக்கு அபிஷேகம் செய்யக்கூடாது என, சிவாச்சாரியார்களுக்கு சிவகங்கை தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !