உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென் திருப்பதியில் தெப்போற்சவம் விழா

தென் திருப்பதியில் தெப்போற்சவம் விழா

மேட்டுப்பாளையம்: தென்திருப்பதி வேங்கடேஸ்வர வாரி கோவிலில், தெப்போற்சவம் விழா நடைபெற்று வருகிறது.

சிறுமுகை அருகே ஜடையம்பாளையம் ஊராட்சி, தென்திருப்பதியில் வேங்கடேச வாரி கோவில் உள்ளது. இக்கோவிலில் தெப்போற்சவ வைபவ விழா துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் தெப்பக்குளத்தில் அலங்காரம் செய்த தேரில் சுவாமிகள் எழுந்தருளி உலா வந்தனர். தெப்பக்குளத்தில் தேரில் சுவாமிகள் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இவ்விழா வருகிற, 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் சுவாமிகள் தெப்ப தேரில் எழுந்தருள உள்ளனர். இந்த வைபவம் விழாவில், கே.ஜி.நிறுவனங்களின் சேர்மன் பாலகிருஷ்ணன், அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர், கே.ஜி. தொழில் நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !