ஆழ்வார் திருநகரி: ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா கருட சேவை நடந்தது.
இக்யிலில் மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றம் 1ம் தேதி அன்று நடைபெற்றது. தினமும் நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. ஐந்தாம் திருநாளை முன்னிட்டு இரவில் சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் உற்சவா் பொலிந்து நின்ற பிரான் பெரிய திருவடியான கருடன் மீது எழுந்தருளி சேவை சாதித்தனர். அத்யாபக கோஷ்டியினருடன் ஜீயா் சுவாமிகள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சாம வேத சாரமான திருவாய்மொழி பாசுரங்களை விண்ணப்பத்து முன் செல்ல சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளி குடைவரை பெருவாயிலில் கருடசேவையில் காட்சி தந்தருளினார். கருட சேவை மாட வீதிகளில் வலம் வந்தது. ஜீயர் சுவாமிகள் மற்றும் ஆச்சாரிய ருமக்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி , அதிமுக., நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.