உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி திருகல்யாணம் கோலாகலம்

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி திருகல்யாணம் கோலாகலம்

சென்னை: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர்-திரிபுரசுந்தரி திருகல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் உற்சவர் தியாகராஜர் , சூரிய பிரபை, சந்திர பிரபை, நாகவாகனம், அதிகாரநந்தி யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தா். திருத்தேரோட்டம் மார்ச் 4 ம் தேதி நடைபெற்றது. விழாவில் இன்று முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர்-திரிபுரசுந்தரி திருகல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும், சுந்தரருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் மகிழ மரத்தடியில் குழந்தை ஈஸ்வரர் காட்சி தரும் மகிழடி சேவை நிகழ்ச்சியும், இரவில் தியாகராஜசுவாமி மாடவீதி உற்சவமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !