பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்
ADDED :1028 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.
பெரியகுளம் வடகரையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மலை மேல் வைத்தியநாதசுவாமி கோயிலின் உப கோயிலான பகவதி அம்மன் கோயிலில் மாசி திருவிழா 10 நாட்களாக நடந்தது. பக்தர்களுக்கு வேண்டிய வரம் தரும் பகவதி அம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் அம்மனை வணங்கி விட்டு செல்வர். தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். மார்ச் 8 திருவிழா நிறைவு நாளில் ஏராளமான பக்தர்கள் அக்கினி சட்டி, பால்குடம் எடுத்தும், முதுகில் அலகு குத்தி அம்மனை தேரில் இழுத்து அம்மனை வழிபட்டனர். மார்ச் 14ல் மறுபூஜை நடக்கிறது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் ஏற்பாடுகளை மண்டகப் படிதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.