சாய்பாபா கோவிலில் பாலாபிஷேகம்
ADDED :4779 days ago
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று நடந்த பாலாபிஷேக உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை சாய்நகரில், ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், சந்தியா, சேஜ் ஆரத்தி நடந்தது. இரவு, மருத்துவர் ஆர்.பி.என்., ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சியில், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சாய்சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.