உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோடி சுவாமிகள் ஆண்டு விழா : தனுஷ்கோடியில் கடல் பூஜை

கோடி சுவாமிகள் ஆண்டு விழா : தனுஷ்கோடியில் கடல் பூஜை

ராமேஸ்வரம்: பொன்முடி கோடி சுவாமிகளின் 23ம் ஆண்டு விழா தனுஷ்கோடியில் பக்தர்கள் கடல் பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பொன்முடி ஸ்ரீ கோடி சுவாமிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ்கோடியில் தவமிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். இதனை நினைவு கூறும் விதமாக நேற்று 23ம் ஆண்டு விழா யொட்டி தனுஷ்கோடி கடலில் பூஜை செய்து பக்தர்கள் தரிசித்தனர். நேற்று காலை சென்னை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தனுஷ்கோடியில் உள்ள கோடி சுவாமி கோயிலில் வேத விற்பன்னர்கள் மூலம் கோ பூஜை, கணபதி ஹோமம் நடத்தினர். பின் முளைப்பாரியை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று தனுஷ்கோடி கடலில் கரைத்தனர். இதனை தொடர்ந்து தனுஷ்கோடி கடலில் படையல் மற்றும் கடல் பூஜை செய்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !