சுங்குவார்தோப்பு உற்சவம் வெகு விமரிசை
ADDED :1039 days ago
வாலாஜாபாத் : வாலாஜாபாத் அடுத்த திம்மராஜம்பேட்டை கிராமத்தில், பாலாறு ஒட்டிய பகுதியில், சுங்குவார்தோப்பு உள்ளது.
இங்கு, மாசி மாத பவுர்ணமி தினத்தில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் இளையனார்வேலுார் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர், உற்சவ மண்டபத்தில் எழுந்தருளுவர். நடப்பாண்டு மாசி மக திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதே இரவு, ரிஷப வாகனத்தில் பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இளையனார்வேலுார் பாலசுப்பிரமணியருக்கு விசேஷ பூஜை செய்து, அவளூர் கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.