தென்கரையில் கும்பாபிஷேக விழா
ADDED :1052 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள சங்கையா, சந்திவீரப்பன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. மதுரை கணபதி பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் நான்கு கால யாக பூஜை செய்து கடம் புறப்பாடானது. இவ்விழாவில் திருப்பணி கமிட்டி தலைவர் பிரசன்னா மூர்த்தி, செயலாளர் பரந்தாமன், பொருளாளர் நீதிவளவன், பரம்பரை பூசாரி தினகரன், ரமணன் ஆகியோரிடம் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்து பீடத்தில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து பரிவார தெய்வங்களான அங்காளபரமேஸ்வரி, சங்கிலி, கருப்பன் சன்னதிக்கு குடமுழுக்கு நடந்தது. திருப்பணிக்குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.