பழநி மாசித் திருவிழாவில் அன்னதானம்
ADDED :943 days ago
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் பழநி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது.
பழநி, மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கடந்த மார்ச்.8, அன்று தேரோட்டம் நடைபெற்றது. மாசிசித்திருவிழா நிறைவு பெற்ற நிலையில் பழநி, மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஜெயம் சரவணன், தலைமையில் கையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் பின் பேரமைப்பின் கௌரவத் தலைவர் ஹரிஹர முத்து அறிவுறுத்தல் படி அன்னதானம் நடந்தது. இதில் புலிப்பாணி பாத்திர சுவாமிகள், பேரமைப்பின் நிர்வாகி கண்ணுச்சாமி, கவுன்சிலர்கள் சுரேஷ், பத்மினிமுருகானந்தம், புஷ்பலதா, கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.