திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கருடசேவை கோலாகலம்
ADDED :942 days ago
திருநெல்வேலி : திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் ஐந்தாம்நாள் இரவு 5 நம்பி கருடசேவை நடந்தது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா 8ம்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், காலை மற்றும் இரவில் அழகியநம்பிராயர் பல்வேற வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 5ம் நாளான நேற்று நடைபெற்றது. நேற்று 12ம் தேதி இரவில் 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் இன்று அதிகாலை நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு திருக்காட்சி கொடுக்கின்றனர். தேரோட்ட விழா 10ம் நாளான 17ம் தேதி நடக்கிறது.