குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம் ஆறாட்டுடன் நிறைவு
பாலக்காடு: கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளன பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு எல்லா ஆண்டும் மாசி மாதம் பத்து நாள் கொண்ட உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் கடந்த மார்ச் 3ம் தேதி யானையோட்டம் மற்றும் கொடியேற்றத்துடன் ஆரம்பித்தன.
தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் உற்சவமூர்த்திக்கு நடைபெற்றன. மேலும் இந்த உற்சவ நாட்களில் செண்டை மேளம் முழங்க யானைகள் அணிவகுப்புடன் உற்சவரின் தங்க உருவச்சிலை எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று மூலவரின் ஆறாட்டு நிகழ்ச்சிகள் மாலை 4.30 மணி அளவில் ஆரம்பித்தன. தொடர்ந்து மூலவர் வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாதித்தனர். இதையடுத்து தீப ஆராதனை நடந்தன. பஞ்சவாத்திய மேளம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்புடன் உற்சவர் எழுந்தருளும் வைபவம் நடந்தன. இதையடுத்து ருத்ர தீர்த்த குளத்தின் வடக்கு பகுதியில் மூலவர் ஆறாடும் நிகழ்வும் நடந்தன. இதை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். உற்சவர் ஆறாடிய தீர்த்தக் குளத்தில் காத்து நின்று ஏராளமான பக்தர்கள் நீராடி பக்தி பரவசமடைந்தததும் குறிப்பிடத்தக்கது.