உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி கடலில் காணிக்கை தேடல்

ராமேஸ்வரம் அக்னி கடலில் காணிக்கை தேடல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் வீசிய காணிக்கையை, கூலித் தொழிலாளர்கள் தேடி சேகரித்தனர். கடலில் கரைத்த பெருங்காயம் என்பது போல் கடலில் விழும் எந்த பொருளையும் எவ்வித தொழில்நுட்ப கருவி இன்றி தேடி எடுப்பது எளிதல்ல. ஆனால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், அக்னி தீர்த்த கடலில் நீராடும் போது பணம், நாணயம் மற்றும் நாக தோஷம் கழிக்க, திலக ஹோமத்திற்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக கடலில் போடுவார்கள். இதில் பணம் கரை ஒதுங்கும், நாணயம், விலையுயர்ந்த பொருள்கள் கடலுக்குள் மணலில் புதைந்து விடும். இதனை பிறர் எளிதில் எடுத்து விட முடியாது. ஆனால் ராமேஸ்வரத்தை சேர்ந்த கடல் சார்ந்த கூலி தொழிலாளர்கள் சிலர், முகம், மூக்கில் கடல் நீர் புகாதபடி பிரத்யோக கண்ணாடி அணிந்து கொண்டு, தினமும் அக்னி தீர்த்த கடலோரத்தில் மூழ்கிய நாணயம், விலை உயர்ந்த பொருட்களை தேடி சேகரிக்கின்றனர். இதில் சில தொழிலாளர்களுக்கு தங்கம், வெள்ளியுடன் ஜாக்பாட்டும், சிலருக்கு நாணயம் மட்டுமே கிடைக்கும். இருப்பினும் பக்தர்களின் கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு தொழிலாளர்களின் தேடல் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !