மாமரத்து நாக காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1265 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே உப்பில்லா கஞ்சி மடத்தில் ஸ்ரீ பூவனத்து மாமரத்து நாக காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு பங்குனி மாத கடைசியில் திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோயிலில் உள்ள நாகராணி அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனுக்கு, வளையல், மஞ்சள் அணிவித்து வழிபட்டனர். சேலை, வளையல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.