சிவன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற சிறப்பு யாகம்
ADDED :943 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திருவெற்றியூர் அருகே புல்லுகுடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இக்கோயில் உள்ளது. இந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட இராமநாதபுரம் மாவட்ட சிவன் அடியார்கள் கோயிலில் உழவாரப்பணி மேற்கொண்டு, திருவாசகம் முற்றோதல் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, கோயில் கும்பாபிஷேகம் விரைவாக நடைபெற வேண்டி, சிறப்பு யாகசாலை பூஜைகள் செய்து சிவனடியார்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். சிவனடியார் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.