2013 ஹஜ் புனித யாத்திரைக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அறிவிப்பு
ADDED :4815 days ago
மதுரை: அடுத்த ஆண்டு (2013) ஹஜ் புனித யாத்திரை செல்ல விரும்புவோர் இப்போதே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி நேர சிரமத்தை தவிர்க்கவும், போலீசாரின் நடவடிக்கைகளை முறைப்படி முடிக்கவும் இது அவசியம். அடுத்த ஆண்டு முதல் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பம் செய்வோருக்கு, பாஸ்போர்ட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 15க்குள் செலுத்த வேண்டும், என பாஸ்போர்ட் அலுவலர் சுந்தரராமன் (பொறுப்பு) தெரிவித்தார்.