பங்குனி மாத பிறப்பு: பழநி மலைக்கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :948 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி, முருகன் மலைக்கோயிலில் பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு வெளிப்பிரகாரத்தில் ஆனந்த விநாயகர், சன்னதி முன் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. மலைக்கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.